நாடொன்றில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொவிட்-19 தடுப்பூசி
கியூபாவில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு கொவிட்19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நேற்று ஆரம்பித்துள்ளது. 11.2 மில்லியன் மக்களைக் கொண்ட கியூபாவில் 2020 மார்ச் முதல் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறுவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கியூபா திட்டமிட்டுள்ளது. இதன்படி கியூபாவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த வெள்ளியன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதையடுத்து, 2 முதல் 11 வயதுக்குட்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை ஏனைய பல நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகின்ற நிலையில் சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசூவேலா என்பன குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
எனினும் , அதை முதலில் அமுல்படுத்திய நாடாக கியூபா விளங்குகிறமை குறிப்பிடத்தக்கது.