கவலை அளிக்கிறது... உலக சுகாதார அமைப்பின் தலைவர் வெளியிட்ட தகவல்
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
இந்தியாவிலும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரயஸ், சீனா தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
தற்போது சில நாடுகளில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலை அளிக்கிறது.
சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்தவேண்டும். சீனாவுக்குத் தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.