கனடிய பட்டயக் கணக்காளர் ஒன்றியத்தின் அறிவிப்பு
கனடிய பட்டய கணக்காளர் ஒன்றியம், (சீ.பீ.ஏ) தனது ஒன்டாரியோ மற்றும் கியூபெக் நிறுவனங்களுடன் கல்வி, தேர்வுகள் மற்றும் கணக்கியல் தொழிலுக்கான தரநிலை தொடர்பில் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
சிபிஏ ஒன்டாரியோ மற்றும் கியூபெக் சிபிஏ ஆர்டர் ஆகியவை தேசிய அமைப்பிலிருந்து டிசம்பர் 20 அன்று அதிகாரப்பூர்வமாக விலகிக் கொள்வதாக அறிவிக்கப்படுகிறது.
ஜூன் 2023 இல் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பிளவு பற்றிய செய்தி, கியூபெக் மற்றும் ஒன்டாரியோவில் உள்ள பட்டய கணக்காளர் ஒன்றியங்கள், தேசிய அமைப்பின் எதிர்காலப் பங்கு பற்றிய கேள்விகளை எழுப்பியிருந்தது.
மாகாண மற்றும் பிராந்திய நிறுவனங்கள் கணக்கியல் தொழிலை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் செயல்படுத்துகின்றன.
அதே நேரத்தில் கனடிய பட்டயக் கணக்காளர் ஒன்றியம் தரநிலைகளுக்குப் பொறுப்பாக செயற்பட உள்ளது.
மேலும் நாடு முழுவதும் பட்டயக் கணக்காளர் ஒன்றிம் பொதுத் தேர்வையும் கல்வியையும் ஒருங்கிணைக்கிறது.
மாணவர்களுக்கான தற்போதைய கல்விப் பாதையைப் பாதுகாக்கும் வகையில் கடந்த நவம்பரில் முன்னர் அறிவிக்கப்பட்ட கல்வி ஒப்பந்தத்தை மூன்று அமைப்புகளும் இறுதி செய்துள்ளதாக CPA கனடா தெரிவித்துள்ளது.