கனடாவில் பழங்குடியின மக்கள் வாழும் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் வடக்கு பேய் ஜேம்ஸ் நகராட்சியில் அமைந்துள்ள மிஸ்ஸிடின்ஸி பழங்குடியின கிராம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டதாகவும், இதனால் குறித்த பகுதியில் அவசர முடக்கம் (lockdown) அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 30 வயதிற்குட்பட்ட இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுளள்ன.

ரிவர்சயிட் தெருவில் பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் எனுவும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச் செயலாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக உறுப்பினர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி கிராமத்தை முடக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அனைத்து குடியிருப்பாளர்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்குள் தங்கியிருந்து கதவுகளை பூட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கட்டிடங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பிற வசதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மேலும், கிராமத்திற்குள் நுழைவும் வெளியேறும் பயணங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.