கனடா கிரிக்கட் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் அதிரடி தீா்மானம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது உறுப்புறுரிமை விதிகளை தீவிரமாக மீறிய குற்றச்சாட்டின் கீழ், கிரிக்கெட் கனடா (Cricket Canada) அமைப்பை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிரடி முடிவை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்றைய தினம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் கனடா அமைப்பு தனது கடமைகளைச் சரியாக நிறைவேற்றாததே இந்த தற்காலிக தடைக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
கனடா கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகச் சிக்கல்களால் அந்நாட்டு வீரர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதையும், அவர்களின் நலனைப் பாதுகாப்பதையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த இடைநீக்கக் காலம் நடைமுறையில் இருந்தாலும், கனடா நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாட தகுதி உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் குழுவின் குறைபாடுகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், வீரர்களின் எதிர்காலத்திற்கு எவ்வித பாதிப்பும் வராதவாறு ஐசிசி இந்த விதிவிலக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.