பெருந்தொகை போலி கால்பந்து ஜெர்சிகளை கைப்பற்றிய பொலிஸார்
கனடா வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான போலி கால்பந்து ஜெர்சிகளை (Soccer Jerseys) பறிமுதல் செய்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பெரிய மோசடி விசாரணைக்குப் பிறகு இந்த அதிரடி பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான விவரங்கள் இன்று மதியம் 1:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) வெளியிடப்படும் என பொலிஸார் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத இறுதியில் டொராண்டோவில் ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ண போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு சில வாரங்களுக்கு முன்பாக இந்த மிகப்பெரிய போலி ஜெர்சி கும்பல் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் நடைபெறும் இந்த சந்தர்ப்பத்தில் போலி பொருட்கள் மூலம் லாபமீட்ட முயற்சிப்போருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.