கனடாவில் பிரபல மதுபானம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் புகழ்பெற்ற விஸ்கி வககைளில் ஒன்றான கிரவுன் ராயல், அதன் ஒரு தயாரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது,
ஏனெனில் பாட்டில்களில் கண்ணாடி இருக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை மையமாகக் கொண்ட விஸ்கி விநியோகஸ்தரான டியாஜியோ கனடா இன்க்., "கிரவுன் ராயல் ரிசர்வ்" பிராண்டின் "12 ஆண்டுகள் முதிர்ந்த" என்று பெயரிடப்பட்ட தயாரிப்பே இவ்வாறு மீளப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடித் துண்டுகள் காணப்படக்கூடிய சாத்தியங்கள் காரணமாக இந்த வகை விஸ்கி திரும்பப் பெறுகிறது.
கனேடிய உணவு ஆய்வு முகமை (CFIA) வெளியிட்ட திரும்பப் பெறுதல் அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோர், மற்றும் ஒன்டாரியோ ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.