மக்களுக்கான இணைய சேவையை முடக்குவதில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஆசிய நாடு
இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் மிக அதிக எண்ணிக்கையில் மக்களுக்கான இணையை சேவை அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் உலக நாடுகளில் மொத்தம் 187 முறை அரசாங்கத்தால் மக்களுக்கான இணைய சேவை முடக்கப்பட்டதில், இந்தியாவில் மட்டும் 87 முறை நடந்துள்ளது.
இதில் இந்திய அரசாங்கத்தால் நேரிடையாக ஆட்சி நடத்தப்படும் காஷ்மீரில் 49 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அரசியல் ஸ்திரமின்மை மற்றும் வன்முறை காரணமாக காஷ்மீரில் குறைந்தது 49 முறை இணைய சேவையை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
மேலும், 3 நாட்கள் ஊரடங்கின் போது மொத்தம் 16 முறை இணைய சேவையை துண்டித்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 2019 ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சியை ரத்து செய்தது.
அத்துடன், இரண்டு கூட்டாட்சி நிர்வாக பிரதேசங்களாகவும் பிரித்தது. அன்றிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக பாஜக அரசாங்கம் அப்பகுதியில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை வழக்கமாக விதித்து வந்துள்ளது.
2017ல் இருந்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் மக்களுக்கான இணைய சேவையை முடக்கும் நாடாக இந்தியா உருமாறியுள்ளது.
இரண்டாவது இடத்தில் உக்ரைன் உள்ளது. பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையைடுப்பை முன்னெடுத்த பின்னர், அந்த நாட்டுக்கான இணைய சேவையை 22 முறை ரஷ்ய அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
மத அடிப்படைவாத நாடு என கூறப்படும் ஈரானில், கடந்த 2022ல் 18 முறை மட்டுமே இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.