இரண்டாம் உலகப்போரின் பின் அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் பாரிய ஆபத்து!
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல் சைபர் தாக்குதல்களே என உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் (Hon Clare O'Neil) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கான புதிய சைபர் பாதுகாப்பு தந்திரோபாயத்தை அறிவித்துள்ள அவர், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அவுஸ்திரேலியா மிகவும் ஆபத்தான மூலோபாய சூழ்நிலையை எதிர்கொள்கின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்தகாலங்களில் அவுஸ்திரேலியா மோதலில் ஈடுபடும் வரை அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதில்லை எனவும் அவர் (Hon Clare O'Neil) சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது புதிய ஆயுதங்கள் எங்கள் பிரஜைகளின் வாழ்விற்கு புதிய பாதுகாப்பு சவால்களை நாளாந்தம் கொண்டுவருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதல்கள்
சைபர் தாக்குதல்கள் எங்கள் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளன,எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை செலுத்தியுள்ளன எங்கள் தனிப்பட்ட விடயங்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் கிளார் ஓ நெய்ல் (Hon Clare O'Neil) கூறினார்.
அதோடு எங்கள் வர்த்தகம் ஆராய்ச்சியிலும் இது தாக்கத்தை செலுத்தியுள்ளது நாங்கள் மிகவும் கடினமான முயற்சிகளில் ஈடுபட்டு கண்டுபிடித்த விடயங்கள் திருட்டுப்போகும் ஆபத்து காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதல்கள் எங்கள் ஜனநாயகத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பல்கலைகழகங்களின் நாடாளுமன்றத்தின் தீர்மானங்களில் அந்நிய சக்திகள் தாக்கம் செலுத்த முயல்கின்றன என உள்துறை அமைச்சர் (Hon Clare O'Neil)தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அவர்கள் தவறான பிழையான தகவல்களை அவுஸ்திரேலியர்கள் மத்தியில் பரப்புகின்றனர் அவை வைரஸ் போல எங்கள் சமூகத்தில் பரவுகின்றதாகவும் அமைச்சர் கிளாரே ஓ நெய்ல் (Hon Clare O'Neil) தெரிவித்துள்ளார்.