மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான ஆயுதங்கள்
மாதம்பிட்டிய பகுதியிலுள்ள மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி (Pistol) ஒன்று, அதன் மெகசின் (Magazine) ஒன்று மற்றும் 09 மில்லிமீட்டர் ரகத் தோட்டாக்கள் 04 என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து (Dubai) நாடுகடத்தப்பட்டவரும், சர்வதேச சிவப்பு நோட்டீஸ் (Red Notice) விடுக்கப்பட்டிருந்தவருமான மோதரைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது
அவர் தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை பகுப்பாய்வுப் பிரிவில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாரணை அதிகாரிகளால் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களுக்கு அமைய, நேற்று நண்பகல் மேற்படி ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 09 மில்லிமீட்டர் ரகத் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ஒன்று, 09 மில்லிமீட்டர் ரக மெகசின் ஒன்று மற்றும் 7.6 மில்லிமீட்டர் ரகத் தோட்டாக்கள் 03 ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை பகுப்பாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.