அல்பர்ட்டா தேர்தலில் ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி?
அல்பர்ட்டா தேர்தலில் ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித்தின் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்மித் மீண்டும் முதல்வராக கடமையாற்றுவார் என அதிகாரப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
87 ஆசனங்களைக் கொண்ட சட்ட மன்றில் டெனியல் ஸ்மித் 50 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், இந்த தேர்தலில் ராச்செல் நொட்டாலி தலைமையிலான என்.டி.பி கட்சி கடுயைமான சாவல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேர்தலில் வெற்றியை ஸ்மித் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தோல்வியை நொட்டாலி ஏற்றுக்கொண்டுள்ளார்.
மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் சிறந்த சேவை வழங்க உள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.