தாய் மற்றும் தந்தை திருமணம் செய்துக்கொண்ட நாளில் மகளுக்கும் திருமணம்-கண்டியில் நடந்த சம்பவம்
திருமணம் செய்துக்கொள்ளாமல் 35 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தாய்,தந்தை திருமணம் செய்துக்கொண்ட தினத்தில் ஆறு பிள்ளைகள் இருக்கும் அவர்களின் மகள் உட்பட பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருக்கும் மேலும் 19 குடும்பங்கள் ஒரே தினத்தில் பதிவுத் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் கண்டி யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவில் குருகம என்ற கிராமத்தில் நடந்துள்ளது.
சைவ முறைப்படி திருமணம்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் ஒன்ற வாழ்ந்து வந்த பதிவு திருமணம் செய்துக்கொள்ளாத இந்த 19 குடும்பத்தை சேர்ந்தவர்களை நேற்று குருகம ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு அழைத்து அவர்களுக்கு பதிவுத் திருமணத்தை செய்து வைக்கும் நிகழ்வை சைவ சமய சடங்குகளுக்கு அமைய சோமேஸ் குருக்கள் நடத்தி வைத்துள்ளார்.
54 வயதான ஆறுமுகம் மற்றும் 52 வயதான சரஸ்வதி ஆகிய தம்பதிக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் திருமணம் செய்துக்கொண்ட தினத்தில் அவர்களின் மூத்த மகளான 34 வயதான மாரியா மற்றும் கமலதாஸ் ஆகியோரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
பதிவுத் திருமணத்தை ஒழுங்கு செய்த பிரதேச செயலகம்
இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். கண்டி அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த பதிவுத் திருமண நிகழ்வை யட்டிநுவர பிரதேச செயலகம் ஒழுங்கு செய்திருந்தது.
சட்டரீதியாக திருமணம் செய்துக்கொள்ளாது ஒன்றாக வாழ்ந்து பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை கொண்டுள்ள 19 குடும்பங்களை சேர்ந்த இந்த உறுப்பினர்கள் தேயிலை தோட்டங்களில் தொழில் புரிந்து வருபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.