கனடாவை மொத்தமாக பதற வைத்த கொடூர இளைஞர்: வெளிவரும் புதிய தகவல்
கனடாவின் கல்கரி நகரை மொத்தமாக உலுக்கிய கூட்டு படுகொலை சம்பவத்தில் புதன்கிழமை வருடாத்திர விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.
கல்கரி நகரில் கடந்த 2014ல் நடந்த ஐவர் கொலை வழக்கில் தொடர்புடைய Matthew de Grood என்பவர் மீதான வருடாந்திர விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.
கல்கரியின் Brentwood பகுதியில் de Grood ஐவரை கத்தியால் தாக்கி கொலை செய்யும் போது அவருக்கு உளவியல் பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் அவருக்கு ஒரு மனநோய் இருந்துள்ளதாகவும், அவருடைய நடவடிக்கைகள் தார்மீக ரீதியாக தவறு என்று அவருக்கு அப்போது தெரியாது என்றும் ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார்.
இருப்பினும் 2020ல் முன்னெடுக்கப்பட்ட வருடாந்திர விசாரணையில், விசாரணை குழு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக de Grood உள்ளார் என்றே முடிவுக்கு வந்தனர்.
மட்டுமின்றி, டி க்ரூட்டின் அனுமதிக்கப்பட்டுள்ள சலுகைகளை நீட்டிக்குமாறு விசாரணை அமைப்பை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
கடந்த 2014 ஏப்ரல் 15ம் திகதி Matthew de Grood என்ற சக மாணவரால் Zackariah Rathwell(21), Jordan Segura(22), Kaiti Perras(23), Josh Hunter(23), மற்றும் Lawrence Hong(27) ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
சம்பவத்தின் போது கல்கரி பல்கலைக்கழக மாணவர்களான இவர்கள், பிரியாவிடை விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர் என்பனது குறிப்பிடத்தக்கது,