சிங்கப்பூரில் சிக்கிய 2 இளைஞர்களுக்கு மரண தண்டனை!
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் பிரஜைகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி மதியம் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 81க்கு அருகில், CNB அதிகாரிகள் நடத்திய சோதனையில் 32 வயதான நபரிடமிருந்து 3,383 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அடுத்து அதற்கு அருகில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் சிக்கியது. அதே குற்றப்பிரிவில் 40 வயது சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டார்.
86 கிராம் கஞ்சாவும், இரண்டு எரிமின்-5 மாத்திரைகளும் குடியிருப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் வீதி மதிப்பு சுமார் 145,000 சிங்கப்பூர் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சோதனையில் சிக்கிய கஞ்சா சுமார் 630 பேர் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இருந்ததாகவும் CNB தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் படி,ஒருவர் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தியதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைதான இருவரிடமும் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.