ஹொங்கொங் தீப்பரவலில் பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு
ஹொங்கொங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் 279 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹொங்கொங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் நேற்று (26) பாரிய தீப்பரவல் ஏற்பட்டது.

நகரின் தீயணைப்பு படையின் 100 வாகனங்களும் 700க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது உயிரிழந்தவர்களில் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாரிய தீ, நகரத்தின் தை போ மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்டது.
அந்த கட்டடங்களில் கட்டப்பட்டிருந்த மூங்கல்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் மிக வேகமாக ஏனைய கட்டிடங்களுக்கும் பரவியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல மணிநேரம் தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.