லெபனா பேஜர் கருவிகள் வெடித்தத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பல பேஜர் கருவிகள் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களில் 2 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பேஜர் கருவிகளில் தலா 20 கிராம் அளவில் உயர் தர வெடி மருந்துகள் நிரப்பப்பட்டிருக்கலாமெனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தச் சம்பவத்திற்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
எனினும், அதற்கு இஸ்ரேல் எவ்வித பதிலையும் இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.