கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு ; மீட்பு பணிகள் தீவிரம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலச்சரிவில் 125-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதோடு ஏறத்தாழ 100 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ராணுவ உதவியுடன் மீட்புப் பணி தொடர்ந்த வண்ணமே உள்ளது.
கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு இது தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் 3,069 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்தாக இந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.