7 ஆண்டுக்கு முன் உயிரிழந்த தந்தை; கூகுள் ஸ்டிரீட் வியூவில் கண்ட மகன்!
கூகுள் ஸ்டிரீட் வியூவில், 7 ஆண்டுகளுக்கு முன் இறந்த தன் தந்தையை கண்ட மகன், அந்த நெகிழ்ச்சியான நிகழ்வை டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிலையில் , அது வைரலாகியுள்ளது கூகுள் நிறுவனத்தின் கூகுள் எர்த்தை, நாம் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். அது பயனர்களுக்கு பெரிதும் உதவும் வகையில், தெருவில் இருக்கும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனிதர்கள், நாம் செல்ல வேண்டிய இடங்களையும் புதிதாக அப்டேட் செய்யப்பட்டு, எளிமையாக காண முடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூகுள் எர்த்தில், தனது தந்தையை ஒருவர் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளார். ஏன் எனில் அவரது தந்தை இறந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை பார்த்ததால் ஆச்சரிய மிகுதியில் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். TeacherUFO என்ற அந்த டுவிட்டர் பயனர், நடந்தவற்றை விளக்கி, பதிவிட்டுள்ளார்.
கொரோனா சூழலில், வீட்டில் மொபைலை பயன்படுத்திய அவர், தனது தாய், தந்தை வாழ்ந்த வீட்டை, கூகுள் எர்த்தில் காணும் நோக்கில் பயன்படுத்தி இருக்கிறார். இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், கூகிள் எர்த் உதவியுடன், எனது பெற்றோரின் வீட்டைப் பார்க்க பயணித்த போது, 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த என் தந்தையைப் பார்த்தேன். அவர் வீட்டிற்கு வெளியே காத்திருந்தார்.
அநேகமாக அவர் என் தாயின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கலாம் என குறித்த நபர் பதிவிட்டதுடன், சாலையின் ஓரத்தில் அவரது தந்தை அமைதியாக நின்றிருப்பதாக, கூகுள் எர்த் காட்டிய புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த இடத்திற்கான இந்த படங்களை, புதுப்பிக்க வேண்டாம் என்றும் கூகுளையும் அவர் வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரது இந்த நெகிழ்ச்சியான பதிவு நெட்டிசன்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டதுடன் வைரலாகியுள்ளது
