கனடாவில் மான் வேட்டையாடியோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மான் வேட்டையாடிய இரண்டு நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வேட்டையாடியமைக்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் இந்த இருவரும் மான் வேட்டையாடியுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மான் வேட்டையாடியமையை ஒப்புக் கொண்ட ஒன்றாரியோவின் டெவ்லினைச் சேர்ந்த டௌசன் காவுல் என்பவருக்கு நீதிமன்றம் 8500 டொலர்கள் அபராதம் விதித்துள்ளது.
கவனயீனமாக ஆயுதம் பயன்படுத்தியதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒன்றாரியோவில் வேட்டை ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெவ்லினைச் சேர்ந்த ஜெராட் டெய்லர் என்பவருக்கு சட்டவிரோத வேட்டையாடலில் ஈடுபட்டமைக்காக 2500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவில் வேட்டையாடுவது ஓராண்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மான் வேட்டையாடுவதற்கான அனுமதிப்பத்திரம் இன்றி இந்த இருவரும் அத்து மீறி வனப்பகுதிக்குள் பிரவேசித்து வேட்டையாடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சந்தேக நபர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதன் காரணமாக நீதிமன்றம் இவ்வாறு அபராதம் விதித்துள்ளது.