பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் கனேடிய நகரம்: கொள்ளை அபாயத்தால் வெளியேற மறுக்கும் மக்கள்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Merritt பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Merritt பகுதியில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெருவெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது Merritt நகரில் கழிவு நீரும் வெள்ளத்தில் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளப்பெருக்கால் பால்ம் ஒன்றும் உடைந்துள்ளது. இந்த நிலையில் கொள்ளை சம்பவங்கள் காரணமாக Merritt நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.
இருப்பினும், வீட்டின் கூரை மீது ஏறி நின்று உதவி கோரிய குடும்பம் ஒன்றை, ஹெலிகொப்டர் மூலம் மீட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை பகல் கண்விழித்த Merritt நகர மக்களை, தேங்கிய மழை வெள்ளத்தின் மீது 3 செ.மீ அளவுக்கான பனிப்பொழிவு வரவேற்றுள்ளது.
மொத்தம் 7,200 மக்கள்தொகை கொண்ட Merritt நகரில் தற்போது மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களே தங்கியுள்ளனர். பெரும்பாலானவர்கள் நகர நிர்வாகத்தின் வெளியேற்றும் நடவடிக்கை காரணமாக பாதுகாப்பானா பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
ஆனால், பாதிக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆள் இல்லாமல் காணப்படுவதால் கொள்ளை சம்பவம் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குடிமக்கள் பலர் விடுதிகளுக்கு மாற முயன்றும், இடம் கிடைக்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.
உணவு பண்டங்களை தற்போது பகிர்ந்து கொள்வதாகவும், குடிநீருக்கு கொஞ்சம் சிரமமாக இருப்பதாகவும் எஞ்சியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். குழாய் நீரும் தற்போதைய சூழலில் குடிக்க பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலம் ஒன்று உடைந்து விழுந்துள்ள நிலையில், மக்கள் தற்போது நகரின் எந்த பாலத்தையும் பயன்படுத்துவதில்லை என கூறியுள்ளனர்.