கனடாவில் திடீரென இந்தக் கருவிக்கு பாரியளவில் கேள்வி
கனடாவில் திடீரென இந்தக் கருவிக்கு பாரியளவில் கேள்வி கனடாவில் காற்றுத் தூய்மையாக்கிக் கருவிக்கு பாரியளவில் கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் அநேக பகுதிகளில் காட்டுத் தீ காரணமாக வளி மாசடைந்துள்ளது.
வளி மாசடைதல் காரணமாக தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களை பாதுகாத்துக் கொள்ள பலரும் காற்று தூய்மையாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனால் காற்றுத் தூய்மையாக்கிக் கருவிகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்களும் விநியோகஸ்தர்களும் தெரிவிக்கின்றனர்.
காட்டுத் தீ பரவுகை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வளி மாசடைந்திருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கடனாவில் காற்று தூய்மையாக்கிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.