பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற மெட்டா?
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்ட பல செயலிகளின் தாய் நிறுவனமாக மெட்டா இருந்து வருகிறது. கோடிக்காணக்காண மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் Meta நிறுவனத்தின் Flo செயலி பெண்களின் அந்தரங்க தகவல்களை முறைகேடாக விற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வெளியாக வாய்ப்புகள்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகர்யங்களை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு உடல்நலத்திற்கு வழிகாட்டவும் Flo என்ற செயலியை மெட்டா அறிமுகம் செய்தது.
அமெரிக்காவில் பல பெண்கள் மாதவிடாய் ட்ராக்கி செயலியாக இதை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு சரியாக மாதவிடாய் உள்ளிட்ட அந்தரங்க பிரச்சினைகள் ஏற்படும் நாட்களில் சரியாக மாதவிடாய் மற்றும் அந்தரங்க உடல்நலம் குறித்த விளம்பரங்கள், தயாரிப்புகள் தொடர்ந்து அவர்களது பயன்பாட்டில் காட்டியுள்ளது.
இதன்மூலம் மெட்டா தங்களது அந்தரங்க உடல்நல தகவல்களை தனிநபர் உரிமையை மீறி நிறுவனங்களுக்கு விற்றுள்ளதாக கலிபொர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதில் Mata, Flo, Google, Flurry உள்ளிட்ட்ட நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.