பராமளிப்பாளர் செய்த கொடூரம்; ஆறு மாத குழந்தையை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
ஆறு மாதக் குழந்தையான ஆர்ச்சி வுட்பிரிட்ஜ் (Archie Woodbridge) உயிரிழந்தமை தொடர்பில் கீரன் ஹம்ப்ரிஸ் (Kieran Humphreys ) என்பவருக்கு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கீரன் ஹம்ப்ரிஸ் (Kieran Humphreys ) தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொடூரமாகத் தாக்கியதுடன், உடனடியாக மருத்துவ உதவி கோராமல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக் கொண்டு நேரத்தை வீணடித்துள்ளார்.

விசாரணையில் அம்பலமான தகவல்
இந்த கொலையை மறைக்க குழந்தையின் தாய் மற்றும் நண்பர்களிடம் கீரன் ஹம்ப்ரிஸ் (Kieran Humphreys ) பொய் உரைத்ததும், காவல்துறையினரைத் திசைதிருப்ப முயன்றதும் விசாரணையில் அம்பலமானது.
ஹம்ப்ரிஸ் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் இந்தச் சதிக்கு உதவிய அவரது தாய் மற்றும் நண்பர்களுக்கும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு வாரப் பழக்கத்திலேயே குழந்தையை நம்பி ஒப்படைத்த தாயின் நம்பிக்கையைச் சிதைத்த இந்தச் சம்பவம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையின் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
6 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த இந்தச் செயல் மிகவும் அறிவற்ற மற்றும் கொடூரமானத் தாக்குதல் என பொலிஸார் தெரிவித்தனர்.