எரிமலை சாம்பலுக்குள் புதைந்துபோன சிறுவன்
இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை சாம்பலுக்குள் சிக்கிப் புதைந்து போன சிறுவனின் சடலத்தை மீட்புக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மிக உயரமான எரிமலை சீற்றத்துடன் வெடித்து, அதன் வாயு மற்றும் சாம்பலால் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் மாயமாகியுள்ளனர்.
ஜாவா தீவில் Semeru எரிமலையானது திடீரென்று சாம்பலை வெளியேற்றியதில் குறித்த எரிமலைக்கு அருகாமையில் உள்ள கிராமங்கள் நகரங்கள் என அனைத்தும் டன் கணக்கினாலான சாம்பலால் புதைந்து போனது.
சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் மாயமாகியுள்ளனர். மட்டுமின்றி கடுமையான காலநிலை காரணமாக மீட்பு நடவடிக்கையும் ஞாயிறன்று நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட Sumberwuluh கிராமத்தில் குடியிருப்புகள் மொத்தமாக சாம்பலில் புதைந்து போனது. இப்பகுதியில் இருந்தே 13 வயதான சிறுவனின் சடலம் மீட்புக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாம்பலில் புதைந்து போயிருந்த சிறுவனின் புகைப்படம் பார்ப்பவர்களை கலங்கடித்துள்ளது. மொத்தம் 56 பேர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். மாயமானதாக கூறப்பட்ட 27 பேர்கள் தொடர்பில் தேடபட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3,000 குடியிருப்புகள் 38 பள்ளிகள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில் Semeru எரிமலையானது பலமுறை வெடித்துள்ளது. கடைசியாக கடந்த ஜனவரியில் வெடித்துள்ளது, ஆனால் ஆள் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.