சுவிட்சர்லாந்தில் ஸ்தம்பித்த டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்பு
சுவிட்சர்லாந்தில் குறிப்பிடத்தக்களவு நேரம் டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்பு ஸ்தம்பிதம் அடைந்தது.
பல்வேறு கொடுக்கல் வாங்கல் கட்டமைப்புக்களில் இலத்திரனியல் கொடுப்பனவு முறை சிறிது நேரம் ஸ்தம்பித்தது.
இதன் காரணமாக வங்கி முறைமை மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு செயலிகள் என்பன ஸ்தம்பித்தன.
கடன் அட்டை நிறுவனமான வீசா, சுவிட்சர்லாந்தின் யூ.பி.எஸ் வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களின் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
வர்த்தக நிலையங்களில் அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியவில்லை எனவும், ஏ.ரீ.எம். இயந்திரங்கள் மற்றும் இணையவழி வங்கிச் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொடுக்கல் வாங்கல் சேவையில் நிலவிய தடங்கல் நிலை சொற்ப நேரத்தில் நீங்கி, வழமைக்குத் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்தினால் இவ்வாறான தடங்கல் ஏற்பட்டது என்பது பற்றிய அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் தொழில்நுட்ப கோளாறுகளினால் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.