கனடாவில் வாகனம் விற்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை
தங்களது வாகனத்தை விற்கத் திட்டமிடுபவர்களை குறிவைத்து புதிய மோசடி ஒன்று நடைபெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அழுக்கு எண்ணெய் மோசடி என அழைக்கப்படும் இந்த முறையில், குற்றவாளிகள் வாகனத்தை திட்டமிட்டு சேதமடைந்தது போல காட்டுகின்றனர்.
இந்த மோசடியில், இயந்திரத்தின் மீது எண்ணெய் தெளித்தல், அழுக்கு எண்ணெய் சேர்த்தல் போன்ற செயல்கள் இடம்பெறும்.

பின்னர் வாகனம் இயக்கப்படும் போது புகை வெளியேறும்; இதை பயன்படுத்தி “இயந்திரம் பழுதாகிவிட்டது” என்று உரிமையாளரை நம்ப வைத்து மிகவும் குறைந்த விலையில் வாகனத்தை வாங்க முயற்சிக்கின்றனர்.
ஒன்டாரியோ மாகாணத்தின் பாரிஸ் பகுதியில் வசிக்கும் மார்க் ரோஃபி மற்றும் கரோல் கிராஃபோர்டுக்கு இதே மோசடி நடைபெற்றுள்ளது.
அவர்கள் தங்களது 2016 Hyundai Santa Fe வாகனத்தை முகநூலில் 7,000 டாலருக்கு விற்பனைக்கு வெளியிட்டிருந்தனர்.
வாகனத்தில் கோளாறு காணப்படுவதாக கூறி வாகனத்தை கொள்வனவு செய்ய வந்தவர்கள் ஆயிரம் டொலருக்கு வவாகனத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும் பின்னுர் சீ.சீ.டி.வி காணொளியை பார்த்த போது அவர்கள் திட்டமிட்டு வாகனம் பழுதடைந்தது என்பது போல் காண்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான கும்பல்களிடமிருந்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.