சிறையில் தற்கொலை செய்துகொண்ட பிரபல மருத்துவர்: நோயாளிகள் சாட்சியம்
அமெரிக்காவில் பலாத்காரம் மற்றும் துஸ்பிரயோக வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட பிரபல நரம்பியல் மருத்துவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க் நகரில் பணியாற்றி வந்தபோது தற்போது 68 வயதான மருத்துவர் ரிக்கார்டோ குரூசியானி, தம்மை நாடிவந்த நோயாளிகளை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார்.
மட்டுமின்றி, ஃபிலடெல்பியா மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள ஹோப்வெல்லில் உள்ள அவரது மருத்துவமனைகளில் நோயாளிகளை துஷ்பிரயோகம் செய்ததற்காக குரூசியானி மீது 18 பெடரல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இந்த வழக்குகளில் 2023 ஜனவரி மாதம் விசாரணை முனெடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை பொது குளியலறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மருத்துவர் குரூசியானி விவகாரத்தில் கண்காணிப்பு தேவைப்படவில்லை எனவும் அதனாலையே, உரிய கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
2013ல் தொடங்கி இவர் தம்மை நாடிவரும் நோயாளிகளிடம் அத்துமீறியுள்ளார். இவரால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். மருத்துவர் க்ரூசியானிக்கு செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் குற்றவாளி தீர்ப்பைப் பெற்ற பிறகு ரைக்கர்ஸ் தீவுக்கு அனுப்பப்பட்டார்.
அங்கே அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொண்டு வ்னதார்.
மேலும், க்ரூசியானி தாம் குற்றமற்றவர் என்பதை சட்ட நடவடிக்கைகள் முழுவதும் பராமரித்தார்.
அவர் மீது குற்றம் சாட்டப்பட்டவர்களின் நோக்கங்கள் குறித்து அவரது சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.