இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் ; எச்சரிக்கப்படும் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவிற்கு வரிகளை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹேலி, அதிபர் ட்ரம்ப்பை எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த செயல்பாடுகளால் இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவு
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் “இந்தியா மதிப்புமிக்க சுதந்திரமான மற்றும் ஜனநாயகமான ஒரு நாடு. இந்தியாவின் எழுச்சி என்பது, கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள சீனாவை போல அல்லாமல், சுதந்திர உலகிற்கு நன்மையாக அமையும்.
உலக அளவில் ஒப்பிட்டால் சீனாவிற்கு நிகரான உற்பத்தி திறன் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவால்தான் பெய்ஜிங்கின் விநியோகச் சங்கிலிகளை உடைக்க முடியும்.
அமெரிக்காவில் சீனாவின் உற்பத்தி சங்கிலிகளை உடைக்க இந்தியா அவசியம். ஜவுளி, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் என இங்கு உற்பத்தி செய்யமுடியாத பொருட்களில் சீனாவிற்கு ஈடாக இந்தியாவின் உற்பத்தி திறன் உள்ளது.
எனவே ட்ரம்ப் இந்தியாவை எதிரியாக பாவித்து நடத்துவதை கைவிட்டு, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும்” என்று பேசியுள்ளார்.