பிரதமர் மோடியை பாராட்டி பேசிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி!
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் பிரதமர் நரேந்திர (Narendra Modi) மோடி மற்றும் இந்தியா தொடர்பில் பாராட்டி பேசியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,
இந்தியாவுக்கு என்னை விட சிறந்த நண்பன் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.
பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர் . அவர் சிறப்பாக பணிகளை செய்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எளிதானது கிடையாது. ஒருவொருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்து இருக்கிறோம்'' என்றார்.
மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது;
நான் போட்டியிட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். தேர்தல்களிலும் நான் முன்னிலை வகிக்கிறேன். விரைவில் இது குறித்து நான் முடிவு எடுப்பேன் என்றார்.
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவாரா என்ற விவாதங்கள் எழுந்துவரும் சூழலில் அவரது இந்தப் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.