டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய கோல்ட் கார்ட் விசா
அமெரிக்க நிறுவனங்கள் திறமையானவர்களை தக்க வைத்து கொள்ளும் வகையில் 1 மில்லியன் டொலர் 'கோல்ட் கார்ட்' விசாவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கென பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எச்1பி விசா மிகவும் முக்கியமானது.

இவ்வாறு விசா பெற்று அங்கு சென்று வேலை பார்ப்போருக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, 'கிரீன் கார்ட்' என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், 'கோல்ட் கார்ட்' விசாவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கும் அந்தஸ்தைப் பெறுவதற்கு இந்த கோல்ட் கார்ட் விசா அனுமதிக்கிறது.
இது குறித்து ட்ரம்ப் கூறியதாவது: இந்த கோல்ட் கார்ட் விசா ஓரளவுக்கு ஒரு 'கிரீன் கார்ட்' போன்றது. ஆனால், கிரீன் கார்ட்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது, என்றார்.