வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க பண்டங்கள் குறித்து அறிவிப்பு
அமெரிக்காவினால் கனடா மீது விதிக்கப்பட்ட வரிக்கு பதிலடியாக அமெரிக்க பண்டங்களுக்கு கனடா வரிவிதிப்பு மேற்கொள்ள உள்ளது.
முதல் கட்டமாக சுமார் 30 பில்லியன டொலர் பெறுமதியான பண்டங்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தெந்த பொருட்களுக்கு முதல் கட்டத்தில் வரி விதிக்கப்பட உள்ளது என்பது குறித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ம் திகதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகுசாதனப் பொருட்கள், அல்ஹகோல், ஆடைகள் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு கனடிய அரசாங்கம் வரி விதிக்க உள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இவ்வாறு வரி விதிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் ஏற்றுமதி பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.