அமெரிக்க ஜனாதிபதியின் செயற்பாடு குறித்து ஒன்றாரியோ முதல்வர் அதிருப்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகள் குறித்து ஒன்றாரியோ மாகாண முதல்பர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த 90 நாள் வரிவிதிப்பு இடைநிறுத்தத்தில் கனடா சேர்க்கப்படாமை குறித்து போர்ட் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான வர்த்தக தொடர்புகள் காணப்படும் நிலையில் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளினதும் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய திர்வுத் திட்டங்களை வழங்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரிவிதிப்பில் சில தற்காலிக இடைநிறுத்தங்களை அறிவித்திருந்தாலும், அனைத்து நாடுகளுக்கும் 10% அடிப்படை வரி தொடர்ந்து விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், கனடா 60 பில்லியன் டொலர்வரையிலான அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதித்துள்ளது.
மேலும், வர்த்தகப் போர் தொடருமானால், மேலும் 95 பில்லியன் டொலருக்கான வரிகளையும் விதிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கனடாவுக்கு விதிக்கப்படும் வரி என்பது, அமெரிக்கர்களுக்கே வரியாகும். அதுவே நாம் பார்க்க விரும்பாத கடைசி விஷயம்,” என்றும், அமெரிக்கா வர்த்தகப் போரை நிறுத்தினால், கனடாவும் பதிலடி வரிகளை நீக்கும் என நம்புவதாகவும் போர்ட் தெரிவித்துள்ளார்.