ரொறன்ரோவில் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதி மற்றும் தென் ஒன்றாரியோ ஆகிய பகுதிகள் முழுவதிலும் கடுமையான பனிமூட்டம் நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை செலுத்தும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகளுக்கு பாதை தென்படாது எனவும் முழுமையாகவே பாதை தென்படாத நிலைமையை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதை தென்படாவிட்டால் சாரதிகள் மெதுவாக வாகனத்தை செலுத்துமாறும், வாகன பயணங்களை இடைநிறுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தின் பணிகளுக்கு இடையூறு ஏற்படவில்லை என கனேடிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில வேளைகளில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.