10 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான கனேடியர் விடுவிப்பு: கொந்தளித்த மொத்த குடும்பம்
கனடாவில் 10 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான நபர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோவா ஸ்கொடியாவில் வெள்ளிக்கிழமை பகல் நீதிமன்ற வளாகத்தில் குறித்த தீர்ப்பு கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியது. 30 வயதான Colin Tweedie குற்றவாளி அல்ல என விடுவிக்கப்பட்டார்.
2019 ஜூலை மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் இரண்டரை ஆண்டு காலம் நீதிக்காக போராடியதாக கூறும் சிறுமின் உறவினர்கள், ஆனால் வெளியான தீர்ப்பு தங்களை மொத்தமாக ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கேப் பிரெட்டன் பகுதியில் நண்பர் ஒருவருடன் சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்ற நிலையிலேயே Colin Tweedie என்பவரின் கார் மோதி விபத்தில் சிக்கி மரணமடைந்தார் 10 வயதான Talia Forrest.
இந்த வழக்கில் கைதான கைதான Colin Tweedie மீது மரணத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மாயமானது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
ஆனால் தற்போது அவர் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் Colin Tweedie விடுவிக்கப்பட்டுள்ளார்.