இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாரதி பயிற்றுநர் கைது
கனடாவின் மிசிசாகா நகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸார் ஒரு சாரதி பயிற்றுநரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த நவம்பர் 27 அன்று நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட சாரதி பயிற்றுநர், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட சாரதி பயிற்சிக்காக, மாணவியை அவரது வீட்டிலிருந்து சிவப்பு நிற 2015 டொயோட்டா கொரோல்லா காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பயிற்றுனர், மாணவியிடம் கார்க்சன் சமூக நிலையத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அப்போது வாகனம் நிறுத்தப்பட்ட நிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், 48 வயதுடைய அமீர் குல் (Aamir Gul) என்பவரை நவம்பர் 29 அன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டிருந்தால் அது குறித்து அறியத்தருமாறு கோரியுள்ளனர்.