கருங்கடலில் எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் ; 23 இந்தியர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில், சோச்சி கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாககூறப்படுகிறது.
இந்த ட்ரோன் தாக்குதலில் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அஃப்ராமேக்ஸ் ரியோ என்ற அந்த கப்பலில் 23 இந்தியர்கள் பணியாற்றியுள்ளனர்.

கப்பல்கள் மீதான தாக்குதல்கள்
தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிரோன் தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் கப்பலை நெருங்க முடியவில்லை.
சோச்சி கடற்கரையில் இருந்து பார்த்தபோது கப்பலில் இருந்து மிகப்பெரிய தீப்பிழம்பும், அடர்த்தியான கரும்புகையும் வெளியேறி வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள கடற்கரைகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கருங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.