போதை கும்பல் அட்டூழியம்; 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொடூர கொலை
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 3 இளம்பெண்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 19-ந் திகதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி (20) மற்றும் லாரா இளம்பெண்களை பியூனஸ் அயர்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான புளோரன்சியோ வரேலாவில் உள்ள வீட்டிற்கு ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்றது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை
அங்கு அவர்கள் மூவரும் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இதனை வீடியோ எடுத்து பெரு நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவன் தனது இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பினான்.
போதைப்பொருட்களை திருடினால் இதுதான் கதி என மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் அவன்இதைச் செய்ததாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு 3 இளம்பெண்களின் உடல்களும் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 3 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான போதைப்பொருள் கும்பலின் தலைவனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு கொலையாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர். மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலின அடிப்படையிலான வன்முறையை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளளது.