மற்றுமொரு உலக கின்னஸ் சாதனையை படைத்த துபாய்!
உலகின் மிகப்பெரிய LED ஒளியூட்டப்பட்ட ஒட்டகத்தின் சிற்பத்தை உருவாக்கி துபாய் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
துபாய் - ரிவர்லேண்ட்டில் அமைந்துள்ள துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸில் 7 மீட்டர் உயரமான இந்த சிற்பம், ஐக்கிய அரபு அமீரகத்தின் வளமான பாரம்பரியத்தில் ஒட்டகத்தின் முக்கிய பங்கை பிரதிபலிக்கிறது.
இதேவேளை, ஒட்டகங்கள் அமீரகத்தின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அடையாளம் ஆகியவற்றுடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. அவை நாட்டில் குறிப்பிடத்தக்க மற்றும் மதிக்கப்படும் விலங்காகும்.
ரிவர்லேண்ட் துபாயில் கம்பீரமாக நிற்க வைக்கப்பட்டுள்ள LED ஒட்டகம், ஒவ்வொரு மாலையிலும் சூரிய மறைவிற்குப் பிறகு விவா ரிஸ்டோராண்டேக்கு (Viva Ristorante) அடுத்ததாக ஒளிரும் என்று கூறப்படுகிறது.
மேலும், பார்வையாளர்கள் ரிவர்லேண்ட் துபாயில் சுவையான உணவுகளையும் பொழுதுபோக்கு விருப்பங்களையும் அனுபவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் JumpX அறிமுகப்படுத்திய உலகின் மிகப்பெரிய காற்றினால் நிரப்பப்பட்ட பவுன்சி கோட்டையை (‘Largest Inflatable Bouncy Castle’) நிறுவி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ், அதன் விருந்தினர்களுக்கு இதுபோன்ற மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குவதோடு, துபாய் கேமல் ரேசிங் கிளப் போன்ற நிறுவனங்களுடன் எதிர்கால சாத்தியமான ஒத்துழைப்புகளையும் உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.