நடுவானில் பதற்றம்! அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. நடந்தது என்ன?
அமெரிக்க விமானத்தில் ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைநகர் டெல்லியில் இருந்து வழக்கம் போல ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குப் புறப்பட்டது.
இருப்பினும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வெறும் 3 மணி நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து உடனடியாக டெல்லி விமான நிலைய மருத்துவக் குழு விமானத்திற்கு விரைந்து சென்றது. அந்த பயணியை பரிசோதனை செய்த மருத்துவக் குழு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்தனர்.
இவர் உயிர் இழப்புக்கு காரணம் உடல் நலக்குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்சுவலியால் பரிதாபமாக உயிரிழந்த அந்த ஆண் பயணி அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து உயிரிழந்த பயணியின் உடலை அமெரிக்கா எடுத்துச் செல்ல தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய குழு மூலம் மீண்டும் விமானம் அமெரிக்கா நாட்டிற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.