பாடசாலை ஆரம்பித்த முதல் நாளில் ஆசிரியர் செய்த தவறான செயல்
கனடாவின் டர்ஹம் பகுதியில் பாடசாலை ஆரம்பித்த முதல் நாளிலேயே ஆசிரியர் ஒருவர் தவறான காரியத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வலயத்தில் மிக வேகமாக வாகனத்தை செலுத்தியதாக குறித்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகம் என்ற அதிகபட்ச வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட வீதியில் குறித்த ஆசிரியர் மணிக்கு 95 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் வாகனத்தை செலுத்தியுள்ளார்.
இந்த ஆசிரியருக்கு எதிராக பொலிஸார் பல பிரிவுகளில் வழக்குத் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இவ்வாறு வாகனத்தை மிக வேகமாக செலுத்துவோருக்கு 10000 டொலர்கள் அபராதமும், ஆறு மாத கால சிறைத்தண்டனையும விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளதனால் சாரதிகள் அவதானமாக வாகனத்தைச் செலுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.