டொராண்டோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சைக்கிளோட்டி பலி
டொராண்டோ நகர மையத்தில் வாகனம் ஒன்று மோதியதில் காயமடைந்த 28 வயது சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 18ம் திகதி சர்ச் மற்றும் ஜெரார்ட் தெரு பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஜெரார்ட் வீதியில் மின்சார சைக்கிளில் (இ-பைக்) மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பிக்அப் ரக வாகனமொன்றில் மோதியதில் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.
57 வயதான பிக்கப் டிரக் சாரதி சம்பவ இடத்தில் இருந்ததாகவும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.