கட்டுநாயக்க விமான நிலையத்தில் மக்களுக்காக உருவான புதிய வசதி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் நேற்று (28) முதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக நான்கு மின்னணு வாயில்கள் இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாயில்கள்
இந்த மின்னணு வாயில்கள் (e-Gate) திட்டமானது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம் விமான நிலையத்தின் குடிவரவு நடைமுறைகளை விரைவாகவும், அதிக வினைத்திறனுடனும் முன்னெடுக்க முடியும் என முதன்மை குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த நவீன வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறைந்து, விமான நிலையச் சேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.