உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்பு; ரஷ்ய தூதரகத்துக்குள் புகுந்த லாரி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து, அயர்லாந்து நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்குள் லாரியை செலுத்திய நபரை அந்நாட்டு பொலிசார் கைது செய்தனர்.
உலகளாவிய பிரச்சனைகளில் நடுநிலைமை வகிக்கும் அயர்லாந்து அரசு, இம்முறை ரஷ்ய படையெடுப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அத்துடன் அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் சுற்றுப்புற சுவர்கள் போர் நிறுத்த வாசகங்களால் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் ரஷ்ய தூதரகத்துக்குள் லாரியை பின்புறமாக செலுத்தி அதன் கேட்டை உடைத்தார்.
ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உக்ரைனிய குடும்பத்தின் புகைப்படங்களை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்த அந்த நபர், ரஷ்ய தூதுவர் அயர்லாந்தை விட்டு வெளியேற வேண்டுமெனவும் கோஷம் எழுப்பினார்.
