ஈரானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
தென்கிழக்கு ஈரானில் இன்று (03) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM)) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி காலை 10.25 மணிக்கு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 40.4 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சொத்து அல்லது உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாவில்லை.
எனினும், ஈரான் நிலநடுக்கம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான சில வீடியோக்களில் சாலைகளில் வாகனங்கள் குழுங்குவதையும், கட்டிடங்கள நடுங்குவதையும் காண முடிந்தது.
ஈரானில் நிலநடுக்கம் அடிக்கடி நிகழ்கிறது, ஏனெனில் அரேபிய தட்டு யூரேசிய தட்டுடன் மோதும் நில அதிர்வு தீவிரமான பகுதியில் நாடு அமைந்துள்ளது.