கனடாவில் இளம்பெண்களை குறிவைக்கும் முதியவர் பொலிஸாரால் கைது
கனேடிய ரயில் நிலையத்தில் இரண்டு பெண்களுடன் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை பொலிஸார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ரொறன்ரோவில் உள்ள மெயின் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதை நிலையம் மற்றும் வார்டன் சுரங்கப்பாதை நிலையம் ஆகிய இடங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த நபர் அங்கு நின்ற பெண்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பொலிஸார் அதே சம்பவத்தில் தொடர்புடைய நபரை தேடி வருகின்றனர். இது தொடர்பாக அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
69 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.