ஜாம்பியாவில் தேர்தல் ; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி
தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஹகைண்டே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான பிரைன் முந்துபிலே 38 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் அதிகாரிகள் மீதான தாக்குதல் மற்றும் வாக்குச் சீட்டுகள் திருடப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. பின்னர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
மேலும், நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி தேர்தல் நடைபெற்ற இரவு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.