சமையலறையை உடைத்து உணவு தேடும் யானை! இணையத்தில் வைரலாகும் காணொளி
தாய்லாந்து நாட்டில் உள்ள ஹுதா ஹின் (Hua Hin) நகரில் யானை ஒன்று ஒரு வீட்டின் சமையல் அறையை உடைத்து கொண்டு உள்ளே வந்துள்ளது. தனது தலையை மட்டும் உள்ளே போகும் அளவு சமையலறையை நோக்கி வீட்டின் கட்டுமானத்தை உடைத்துள்ளது.
தலையை மட்டும் சமையலறைக்குள் நுழைத்த யானை, சமையலறையில் இருக்கும் பொருட்களில் சாப்பிட தேவையான பொருட்களை எடுத்து சாப்பிடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வீட்டின் கட்டுமானம் இடிக்கப்படும் சத்தம் கேட்டு, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்மணி எழுந்து வந்து பார்க்கையில் யானை ஒன்று தனது சமையலறைக்குள் தலையை விட்டு உணவு பொருட்களை தேடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.