எலிசபெத் கப்பல் மூலம் சலாலா துறைமுகத்துக்கு வருகை தந்த 1,596 சுற்றுலா பயணிகள்
ஓமன் சலாலா துறைமுகத்துக்கு எலிசபெத் கப்பல் மூலம் வருகை தந்த 1,596 சுற்றுலா பயணிகள் பாரம்பரிய முறையில் வரவேற்க்கப் பட்டுள்ளனர்.
ஓமன் அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஓமன் நாட்டில் தற்போது வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஓமன் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
மேலும் சுற்றுலா கப்பல் மூலமாகவும் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். சலாலா துறைமுகத்துக்கு 1,596 சுற்றுலா பயணிகள் எலிசபெத் கப்பல் மூலம் நேற்று வருகை புரிந்தனர். அந்த பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனையடுத்து அவர்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இந்த சுற்றுலா பயணிகள் இன்று ஓமன் நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் இடங்களுக்கும், பல்வேறு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவர்.
இந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் ஓமன் நாட்டில் தங்களின் பயணத்தை முடித்து விட்டு துபாய் ராஷித் துறைமுகத்துக்கு செல்வர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.