14-ஆவது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், 14-ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சில்லிஸ் என்பவருக்கு 14-ஆவது குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மஸ்க் - ஷிவோன் சில்லிஸ் தம்பதி
ஏற்கனவே எலான் மஸ்க் - ஷிவோன் சில்லிஸ் தம்பதி இணைந்து, கடந்த 2021-ஆம் ஆண்டில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர். தொடர்ந்து இந்த தம்பதி கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தனர்.
தற்போது தங்களது 4-ஆவது குழந்தையை வரவேற்றுள்ளனர். எலான் மஸ்க் தனது முதல் மனைவியான கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் மூலம் ஆறு குழந்தைகளைப் பெற்றார்.
அதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பாடகி கிரைம்ஸுடன் 3 குழந்தைகளும், சில்லிஸுடன் 4 குழந்தைகளும் பெற்றெடுத்துள்ளார்.
எலான் மஸ்கின் 13-ஆவது குழந்தையைப் பெற்றெடுத்ததாக ஆஷ்லே கிளேர் என்பவர் அறிவித்த நிலையில், எலான் மஸ்க் அதுகுறித்து வெளிப்படையாக பேசவில்லை.
இந்நிலையில் உலகில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது மிகப்பெரிய ஆபத்து என்று கூறி வரும் எலான் மஸ்க், அதிக அறிவாற்றல் உடையவர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது