எலான் மஸ்க்கின் சொத்துக்கள் 700 பில்லியனை கடந்தது: வரலாற்றுச் சாதனை
சர்வதேச ரீதியில் முன்னணி தொழிலதிபர்களில் ஓருவரான எலோன் மஸ்கின் மொத்த சொத்துக்கள் 700 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளன.
அண்மையில் வெளியான போர்பஸ் பில்லியனேர்ஸ் குறியீட்டின் படி, மஸ்க்கின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 749 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட $139 பில்லியன் மதிப்புள்ள Tesla பங்கு ஊக்கத்தொகை (stock options) திட்டத்தை அமெரிக்க டீல்வெயார் உச்ச நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்தியதன் விளைவாக, மஸ்க்கின் சொத்து மதிப்பில் இந்த பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மஸ்க்கின் சம்பளத் திட்டம் ஒருகாலத்தில் 56 பில்லியன் டொலர் மதிப்பில் இருந்தது.
அந்த ஒப்பந்தம் “நம்பமுடியாதது” எனக் கூறி கீழ்நிலை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், 2024-ல் அதை ரத்து செய்த தீர்ப்பு முறையற்றது என உச்சநீதிமன்றம் தற்போது தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்பே, இந்த வாரத்தின் தொடக்கத்தில், மஸ்க்கின் சொத்துக்கள் 600 பில்லியனை டொலரை கடந்ததாக செய்திகள் வெளியானது.
குறிப்பாக, அவரது விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள், அவரது சொத்து மதிப்பு உயர்வுக்கு கூடுதல் ஊக்கமாக அமைந்தன.